பொள்ளாச்சி,செப்28:-

பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள செல்லப்பம்பாளையம் பிரிவில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதியது. ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு பொள்ளாச்சி திரும்பிக்கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பொள்ளாச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply