திருச்சிராப்பள்ளி, செப். 25-
திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தொடர்பான 2017 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்த சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தொடர்பான 2017 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்த பணி செப்டம்பர் 1 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
மேலும், 1.1.2017 அன்று 18 வயது நிரம்பியவர்கள் (அதாவது 1.1.1999 முன்னர் பிறந்தவர்கள்) சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வயது மற்றும் இருப்பிடத்திற்குரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, புதியதாக வாக்காளர் பட்டி யலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் படிவம் 8-ஐயும், சட்டப்பேரவைத் தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய இடத்தில் வசிப்பவர்கள் படிவம் 8ஏ-வையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ஐ அளிக்கலாம்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள www.elections.tn.gov.inஎன்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.