ஜெயங்கொண்டம், செப்.26-

அரியலூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 25 பேர், துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடி கிராமத்துக்குச் சென்றுவிட்டு, நேற்று இரவு சரக்கு ஆட்டோவில் கச்சிப்பெருமாள் கிராமத்துக்குப் புறப்பட்டனர்.
கச்சிப்பெருமாள் அருகே வந்தபோது, திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் எதிரே வந்த சிமென்ட் பவுடர் ஏற்றிய லாரி, சரக்கு ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்த உடையார்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திறகு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து காரணமாக திருச்சி-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும் வழங்க இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.