சென்னை,செப் 25 – சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் காவல் நிலைய வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர்.இந்த குண்டுகள் வெடித்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்கள் தீயில் எரித்து சம்பலாகின. தகவல் அறிந்த துரைப்பாக்கம் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.

இது குறித்த விசாரணையில் , கடந்த 22.ம் தேதி சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவர் பெண்ணை தாக்கி நகை பறித்த வழக்கில் கண்ணகி நகர் காவலர்கள் கைது செய்தனர். பின்பு விசாரணை நடந்து வந்த நிலையில் கார்த்திக் திடீரென இறந்தார் .
இதனால் கார்த்திக்கின் உறவினர்கள் கண்ணகி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபட்டனர்.அதன் தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து காவல் நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.  மேலும் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் காவல் அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாது.

Leave A Reply