டமாஸ்கஸ்,செப் 25 – சிரியாவில் உள்நாட்டு பேர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் அந்நாட்டின் விமானப்படைகள் பயங்கர தாக்குதல் நடத்தி வருவதால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இது தொடர்பாக ஆலோசிக்க ஐ.நா பாதுகாப்பு சபை இன்று அவசரமாக கூடுகிறது.

உள்நாட்டு போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிரியாவில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் முயற்சியால் பேர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது பேர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள போதும் அதையும் மீறி தீவிரவாதிகள் கட்டுபாட்டில் உள்ள முகாம்கள் மீது சிரியாவின் விமானப்படை தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அமெரிக்கா – ரஷியா வெளியுறவுத்துறை மந்திரிகளுக்கு இடையில் நியூயார்க் நகரில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

பீப்பாய் குண்டுகள் , கொத்து குண்டுகள் மற்றும் ஆபத்தான போர் ஆயுதங்களையும் சிரியா ராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாக  குற்றச்சாட்டுகள் எழுத்துள்ள நிலையில் ,
அங்கு நிலமை தீவிரமடைந்து வருவதால் இதுதொடர்பாக ஆலோசிக்க அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா பாதுகாப்பு சபை இன்று அவசரமாக கூடுகிறது.

Leave A Reply

%d bloggers like this: