கோவை, செப். 24-
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து வெள்ளியன்று நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் மற்றும் இறுதி ஊர்வலத்தின் போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள்,வழிபாட்டு தளங்கள், அரசு பேருந்துகள், சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள்அடித்து நொறுக்கப்பட்டன. துடியலூர்பகுதியில் இரண்டு கடைகளுக்கும், காவல் துறை வாகனத்திற்கும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த வன்முறையில் ஈடுபட்டதாக 136 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதனால் தற்போது இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பினாலும், சில இடங்களில் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கடைகளை அடைக்கச் சொல்லி மிரட்டி வருகின்றனர். இதன் காரணமாக காந்திபுரம்,டவுன்ஹால், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறப்பதற்கு வியாபாரிகள் அச்சப்படுகின்றனர். மேலும், கோவையில் நடத்தப்பட்ட வன்முறையினால் சிறுபான்மையின மக்கள், பொதுமக்கள் அச்சம் அடைந்து இருக்கின்றனர்.
இந்நிலையில், கோவையை குஜராத்தாக மாற்றுவோம் என்று சம்பவம்நடந்த நாளான்று இந்து முன்னணியின் காடேஸ்வர சுப்பிரமணியன்ஊடகங்களுக்கு பேட்டியளித்ததும் கலவரத்திற்கு முக்கிய காரணமாகும். இத்தகைய வன்முறையை தூண்டும் வகையில் பேசிய இந்து அமைப்புகளின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறைக்கு காரணமானர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.மேலும், கோவையில் பதட்டமான நிலைமை உருவாகாமல் இருக்ககாவல் துறையினர் பாதுகாப்புகளை அதிகரிக்க வேண்டும்.
மதச்சார்பின்மையை பாதுகாக்கும் வகையில் சட்டஒழுங்கை நிலைநாட்டி பாதுகாப்புஉணர்வை ஏற்படுத்துவது அரசின் கடமை என வலியுறுத்தி சனியன்று முற்போக்கு வழக்கறிஞர்கள் சார்பில்வெண்மணி, சுந்தரமூர்த்தி, பாலகுமார், மு.ஆனந்தன், ஆறுச்சாமி, மாசேதுங், கரீம், நிக்கோலஸ் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காவல் ஆணையரை சந்தித்துமனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர்.
வணிகர் சங்கத்தினர் மனு
இதேபோல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்மாவட்ட தலைவர் இருதயராஜ் காவல்ஆணையரை சந்தித்து மனு அளித்தார்.இதில் படுகொலை நிகழ்ந்த அன்று பதட்ட சூழலை கருத்தில் கொண்டு காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால்கோவையில் இத்தகைய இழப்பு ஏற்பட்டிருக்காது. இந்த வன்முறையாளர்களால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தரவேண்டும். மேலும், அனைத்து கடைகளுக்கும் உரிய பாதுகாப்பும், காவல்துறை நம்பிக்கையை ஏற்படுத்தி பொதுமக்கள் இயல்புநிலைக்கு திரும்ப நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.