மாஸ்கோ, செப் 23 – மாஸ்கோவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள் 8 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் கிழக்கு பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வியாழன் அன்று மாலை தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தொழிற்சாலையில் தீவிபத்தில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்டனர்.

ஆனால் தொழிற்சாலையில் ஏற்பட்ட புகை மூட்டம் மற்றும் அனலில் சிக்கிய 8 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர்.இன்று காலை தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட பின்னர் இறந்த வீரர்களின் உடல்களை மீட்கப்பட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.