கன்னியாகுமரி,செப்22:-

கன்னியாகுமரியில் அரசு பழத்தோட்டத்தில் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் கன்னியாகுமரியில் பழத்தோட்டம் தொடங்கப்பட்டது. 42 வகையான மாமரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த நிலையில், நூற்றுக்கணக்கான மாமரங்கள் வெட்டப்பட்டு பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது.

ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணிகள் கடந்த ஒரு ஆண்டாக முடங்கியுள்ளது. இதை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply