கடலூர்,செப்22:-

போதிய விரிவுரையாளா்கள் இல்லாமல் பாடம் கற்க முடியவில்லை என கூறி கடலூர் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசுக் கலைக்கல்லூரியில் 4,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில் கடந்த 3 ஆண்டுகளாக சில குறிப்பிட்ட துறைகளுக்கு உரிய விரிவுரையாளர்கள் இல்லை என மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கல்லூரியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகத்தினுள் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கல்லூரிக்கு பாதுகாவலர் இல்லாததால் சமூக விரோதிகளின் தொல்லைகளை சந்திக்க நேரிடுவதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்களது கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: