பொள்ளாச்சி,செப்20:-

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே நகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லூரில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் மக்காது குப்பைகளுக்கு தீ வைப்பதால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியுள்ளது. இதனால் தங்களுக்கு சுவாசம் மற்றும் இதய சம்மந்தமான நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து பாலக்காடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து  வந்த காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

குப்பை கிடங்கை நகராட்சி நிர்வாகம் வேறு இடத்திற்கு மாற்றவில்லையெனில் தொடர் போராட்டத்தை நடத்தபோவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply