இந்தியா சிமெண்ட்ஸ் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் முதல்  அரையிறுதியின் ஆட்டத்தில்   திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியும் பலப்பரீச்சை நடத்த உள்ளன. இவ்விரு அணிகள் கடந்து வந்ந பாதையை சற்று திரும்பி பார்ப்போம்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி  7 லீக் போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது. பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலும் சம நிலையில் உள்ள திண்டுக்கல் இன்றைய போட்டியில் கேப்டன் ஆர்.அஸ்வின் போட்டியில் பங்கேற்றால் அது அவர்களுக்கு கூடுதல் பலமாக அமையும். ஜெகதீசன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சுப்ரமணிய சிவா என அனைவரும் நல்ல பார்மில் உள்ளனர்.  சிறப்பான யாக்கர்கள்  வீசும் நடராஜன் இருப்பது பவுங்கில் கூடுதல் பலம்.
ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி லீக் போட்டியின் முதல் வெற்றிக்கு பிறகு இரண்டு போட்டிகளில் சறுக்கலை சந்தித்ததது. அதன் பின் மீண்டும் எழுச்சி பெற்று 7 போட்டிகளில் நான்கு வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. தினேஷ் கார்த்தி, அபினவ் முகுந்த், பாலாஜி என்று முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். இதனால் தூக்குக்குடி அணி திண்டுக்கல் அணிக்கு நெருக்கடி கொடுக்கம் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.