திருநெல்வேலி, செப். 15 –
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, நெல்லை வண் ணார்பேட்டையில் உள்ள சாலைத் தெரு ‘புதுமைப்பித்தன் வீதி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கான பெயர்ப்பலகையை திருநெல்வேலி மேயர் புவனேஸ்வரி, வியாழனன்று திறந்து வைத்தார்.
தமிழ்ச் சிறுகதைகளின் தரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றவர் புதுமைப்பித்தன். அவரின் ‘பொன்னகரம்’, ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ பெரிதும் பேசப் பட்டவை. உருவம், உள்ளடக்கம், உத்தியில், வழக்கமான பாதையிலிருந்து விலகி, புதிய பாதை போட்டவர். அவர் எழுதிய சிறுகதைகள் 7 தொகுப்புகளாக வெளிவந்துள் ளன. நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம், ஓரங்க நாடகம், மொழிபெயர்ப்பு என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்.
விருதாச்சலம் என்ற இயற்பெயரைக் கொண்ட புதுமைப்பித்தன், நெல்லை வண்ணார்பேட் டையில் வாழ்ந்தவர். எனவே, அவரின் நினைவாக வண்ணார்பேட் டையில் உள்ள சாலைத்தெருவை புதுமைப்பித்தன் வீதி என்று பெயர் மாற்றக்கோரி, தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கமும், அப்பகுதி பொதுமக்களும் மாநகராட்சி மேயர் புவனேஸ்வரிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இக்கோரிக்கையை பரிசீலித்த திருநெல்வேலி மாநகராட்சி, சாலைத் தெருவுக்கு புதுமைப்பித்தன் வீதி என்று பெயர் சூட்டுவதென முடிவு செய்தது. அதன்படி வியாழனன்று வண்ணார்பேட்டை சாலைத்தெரு, ‘புதுமைப்பித்தன் வீதி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான பெயர்ப்பலகையை மேயர் புவனேஸ்வரி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் கிருஷி, மாவட்டத் தலைவர் இரா. நாறும்பூ
நாதன், நிர்வாகி ராஜகோபால், வணிகவரித்துறை இணை ஆணையரும், எழுத்தாளருமான தேவேந்திரபூபதி, அதிமுக மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், மாநகர் மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, பொருளாளர் தச்சை ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: