ராஞ்சி, செப்.12-
ஜார்கண்டில்  மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் பெண் ஒருவர் சாலையில் குழந்தைபெற்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹெஸ்லா என்ற கிராமத்தை சேர்ந்த மணிதேவி என்ற கர்ப்பிணி பெண் சாலையிலேயே குழந்தையை  பெற்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லதேகார் என்ற மாவட்டத்தைச் சேர்ந்த மணி தேவி அங்குள்ள அரசு அலுவலகத்திற்கு சென்றிருந்த போது, அவருக்கு பிரசவ வலி  ஏற்பட்டது. இதனையடுத்து, பிரசவ வலியால் துடிப்பதை பார்த்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அதை கண்டுகொள்ளாமல், ஆம்புலன்சையும் அனுப்பவில்லை. எனவே பிரசவ வலியால் துடித்த மணிதேவி  சாலை ஓரத்திலேயே குழந்தையை பெற்றெடுத்தார். இதனையடுத்து தகவல் அறிந்த போலீசார், ஆம்புலன்ஸ் அனுப்பி மணிதேவியையும், குழந்தையையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட டாக்டர்கள், மருத்துவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டம் நிர்வாகம் மூலம் விளக்க நோட்டீஸ்  அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.