சிதம்பரம்,செப்.12-

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையும், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை மற்றும் சென்னை கலைஞன் பதிப்பகமும் இணைந்து நடத்தும்”கவிஞர்கள் – பாடலாசிரியர்கள் என்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் துவங்கியது.

முதல் நாளான 12ந்தேதி சாஸ்திரி அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் கவிஞர்கள் – பாடலாசிரியர்களின் வாழ்வும் பணியும் குறித்து 430 தமிழறிஞர்களால் எழுதப்பெற்ற 430 நூல்கள் வெளியிடப்பட்டது. தமிழ் இலக்கிய வரலாற்றில் உலக சாதனையாக இந்த நூல்வெளியீட்டு விழா நடைபெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரும் தமிழியல் துறைத் தலைவருமான முனைவர் அரங்க.பாரி அறிமுகவுரை ஆற்றினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்அன்பழகன் தலைமையேற்று நூல்களை வெளியிட, மலேசிய நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் திரு. டத்தோ எம். சரவணன் பெற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் பேசுகையில் நூல்கள் வெளியிட்டு உலக சாதனை படைப்பது அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மட்டும் தான். அதன் சாதனையை அதே தான் முறியடிக்க முடியும்,கடந்த ஆண்டு 351 நூல்கள், இந்த ஆண்டு 430 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக் கழக நூலகங்களில் உள்ள நூல்களை புக் (டிஜிட்டல்) மூலம் ஒருங்கிணைத்து மாணவர்கள் ஒரு நிமிடத்தில் தேவையான நூல்களை தேடும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தொழில்துறை அமைச்சர் சம்பத்,சிதம்பரம் மக்களவை உறுப்பினர் சந்திரகாசி, சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், காட்டுமன்னார்குடி உறுப்பினர் முருகுமாறன்.உள்ளிட்ட பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுபேசினர். பல்கலைக் கழக பதிவாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.