சென்னை,செப்.11-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் ஞாயிறன்று (செப்.11)  நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் அமைக் கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் பொது மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1.1.2017 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்களை தகுதியாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனுக்கள் வாங்கப்பட்டது.

முகவரி மாறியவர்கள், பெயர் விடுபட்டவர்கள், அடையாள அட்டை இல்லாதவர்கள், புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் தங்களது பெயர் விவரங்களை வாக்குச் சாவடிகளுக்கு சென்று பூர்த்தி செய்து கொடுத்தனர்.ராமநாதபுரம் மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நடை பெற்ற சிறப்பு முகாமில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பெயர் சேர்க்க- திருத்தம் செய்ய மனு கொடுத்துள்ளனர்.

சென்னையில் உள்ள வாக்குச் சாவடிகளில் காலையில் இருந்தே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் வாக்குச் சாவடிகளுக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்த வண்ணம் இருந்தனர். ஞாயிறன்று நடைபெற்ற முகாமுக்கு செல்ல முடியாதவர்களுக்காக வருகிற 25-ந்தேதியும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: