மதுரை,செப்.11-
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை மூன்றடுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

06-mdu-kirama-sanga-peravai-1சங்கத்தின் பேரவை சனிக்கிழமையன்று மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பேரவைக்கு மாநிலத்தலைவர் ஆர்.பாண்டியம்மாள் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சு.கிருஷ்ணன் வரவேற்றுப்பேசினார். மாநிலச்செயலாளர் ஆ.செல்வம் துவக்கிவைத்து பேசினார். சங்கத்தின் மாநிலச்செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, பொருளாளர் கே.லோகேஸ்வரி ஆகியோர்  அறிக்கை சமர்ப்பித்தனர். முன்னாள் மாநிலத் தலைவர் என்.சாந்தகுமாரி மற்றும் தோழமைச் சங்க மாநில நிர்வாகிகள் ஜெ.லெட்சுமி நாராயணன், அ.பாலமுருகன், கே.தங்கராஜ், டாக்டர் கே.செந்தில், கே.எம்.தியாகராஜன், பி.கண்ணகி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி நிறைவுரையாற்றினார்.

கிராம சுகாதார செவிலியர்களுக்கு மூன்றடுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆண் செவிலியர்களுக்கு இணையாக பெண் செவிலியர்களுக்கும் ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ நிதி உதவி கையாள்வதை மாநிலம் முழுவதும் முறைப்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய-மாநில அரசுகள் புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத்தலைவராக பரமேஸ்வரி ,மாநிலப் பொதுச்செயலாளராக ஆர்.பாண்டியம்மாள், பொருளாளராக எஸ்.சத்தியவாணிமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.