புதுதில்லி, செப்.11-
தில்லி ஜவஹர்லால்நேரு பல் கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் எஸ்எப்ஐ – ஏஐஎஸ்ஏ இடது ஒற்றுமை முன்னணி அனைத்து பொறுப்புகளையும் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பி னர் மகேஷ்கிரி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் தேச விரோதி களின் கூடாரம் என குற்றம்சாட்டி யதோடு தேசவிரோதிகளை கைது செய்ய வேண்டும் என புகார் கொடுத்தார். நரேந்திரமோடி தலைமையி லான அரசு, இதைப் பயன்படுத்தி கொண்டு அடுக்கடுக்கான தாக்கு தலை தொடுத்தது. இது தேசிய அளவிலான பிரச்சனையாக  முன்னெ டுக்கப்பட்டது. இடதுசாரிகள் அனைவருமே தேசவிரோதிகள் என முத்திரை குத்துவதற்கான முயற்சியில் பாஜக – ஆர்எஸ்எஸ் கூட்டணி இறங்கியது.

இடதுசாரிக் கட்சிகளின் தலை வர்கள் தாக்கப்பட்டனர். கட்சி அலுவலகங்கள், ஆர்எஸ்எஸ் குண்டர் களால் தாக்கப்பட்டன. ஜேஎன்யு மாணவர் பேரவை தலைவர் கன்னய்ய குமார் மற்றும் உமர்காலித் போன்ற மாணவர் தலை வர்கள் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர்.

பாஜக அரசின் இத்தகைய பாசிசபாணி நடவடிக்கைக்கு எதிராக உறுதிமிக்க போராட்டத்தை இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) – ஏஐஎஸ்ஏ தலைமையில் முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடைபெற்ற மாணவர் பேரவை தேர்தலில் எஸ்எப்ஐ – ஏஐஎஸ்ஏ இடது ஒற்றுமை முன்னணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பாஜக – ஆர்எஸ்எஸ்சின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினை படுதோல்வியடையச் செய்ததன் மூலம் தேசத்துரோகிகள் யார் என்பதை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாண வர் சமூகம் அடையாளப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு விபரம்

பொது வேட்பாளர்களாக ஏஐஎஸ்ஏ- எஸ்எப்ஐ இடது ஒற்றுமை முன்னணி சார்பாக நிறுத்தப்பட்ட 4 வேட்பாளர்களும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். தலைவர் பொறுப் பிற்கு போட்டியிட்ட மொஹித் பாந்தே (ஏஐஎஸ்ஏ) மொத்தம் பதி வான 5138 வாக்குகளில் 1954 வாக்குகளை பெற்று வெற்றி பெற் றார். பிர்சா முண்டா அம்பேத்கர் புலே மாணவர் கழகத்தின் வேட்பா ளர் ராகுல் 1545 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். பாஜகவின் ஏபிவிபி வேட்பாளர் ஜான்வி 1048 வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

துணைத் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்ட இடது ஒற்றுமைமுன்னணியின் வேட் பாளர் அமல்புல்லர்காட்(எஸ்எப்ஐ) 2464 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஏபிவிபி வேட்பாளர் ரவி ரஞ்சன் 1157 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

பொதுச் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட இடது ஒற்று மை முன்னணியின் வேட்பாளர் சத்ரூபா சக்ரவர்த்தி (எஸ்எப்ஐ) 2424 வாக்குகள் பெற்று வெற்றி பெற் றுள்ளார். ஏபிவிபி வேட்பாளர் விஜய் 1330 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

துணைச் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட இடது ஒற்றுமை முன்னணியின்வேட்பாளர் தப்ரேஷ்ஹசன்(ஏஐஎஸ்ஏ) 1670 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஜனநாயக மாணவர் சங்கத் தின் வேட்பாளர் பிரதீப் 1234 வாக்கு கள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். ஏபிவிபி வேட்பாளர் ஓம் பிரகாஷ் 968 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
ஏஐஎஸ்ஏ – எஸ்எப்ஐ இடது ஒற்றுமை முன்னணி மொத்தம் 8509 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.

ஏபிவிபி 4503 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. பிர்சா முண்டா அம்பேத்கர் புலே மாணவர் கழகம் 3805 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ 712 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன. 1140 மாணவர்கள் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர்.

கவுன்சிலர்கள்

மொத்தமுள்ள 31 கவுன் சிலர்களில் 16 கவுன்சிலர்கள் பொறுப்பில் ஏஐஎஸ்ஏ – எஸ்எப்ஐ இடது ஒற்றுமை முன்னணி வெற்றி பெற்றுள்ளது. ஏபிவிபி 1 கவுன்சில் பொறுப்பிலும் ஜனநாயக மாணவர் சங்கம் ஒரு கவுன்சில் பொறுப்பிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கவுன்சில் பொறுப்புகளுக்கு சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய பாஜக அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஏபிவிபியை வெற்றிபெறச் செய்திட அனைத்து விதமான முயற்சி களையும் மேற்கொண்டது. பண பலத்தையும் பயன்படுத்தியது.
இடதுசாரி தத்துவத்திற்கும் – வகுப்புவாத சக்திகளுக்கும் இடையே நடைபெற்ற தேர்தலில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் இடதுசாரி கருத்தியலுக்கான களம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் சனிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு வெளியிடப்பட்டன. தேர்தல் முடிவினை இந்திய மாணவர் சங்கம் – அகில இந்திய மாணவர் கழகம் (எஸ்எப்ஐ-ஏஐஎஸ்ஏ) இடது ஒற்றுமை முன்னணி சார்பாக வெற்றி பேரணியும் கொண்டாட் டங்களும் நடைபெற்றன.
தேர்தல் முடிவு தெரியத் துவங் கிய உடனே காவிக்கும்பல்கள் கூடாரங்களை காலி செய்து விட்டு ஓட்டம் பிடித்தனர்.

நாடு முழுவதும் எதிர்பார்க்கப் பட்ட ஜேஎன்யு தேர்தல் முடிவினை இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு கல்வியாளர்கள் உற்சாகத்தோடு வரவேற்றுள்ளனர். வெற்றி பெற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுதேர்தல் முடிவுக்கு மிகுந்த பாராட்டுதல்களையும் வெற்றிபெற்ற நிர் வாகிகளுக்கு புரட்சிகரமான வாழ் த்துக்களையும் தெரிவித்துள்ளது.

ஜேஎன்யு தேர்தலில் ஏபிவிபி யின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜஜூ புலம்பியுள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் இடதுசாரி தத்துவத்தின் மீது தவறான நாதல் வயப்பட்டுள்ளனர் என்றும், தவறான – வழக்கொழிந்து போன சித்தாந்தத்தை தூக்கி சுமக்காதீர்கள் என்றும் புலம்பியுள்ளார்.

இந்தியாவின் தொன்மையான தத்துவங்களை தேடி வாருங்கள் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.