சென்னை,செப்.11-
சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க இடம் வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் நிர்வாகி மதன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரான பச்சமுத்து கடந்த மாதம் (ஆகஸ்டு) காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சென்னை முதன்மை மாவட்ட அமர்வுநீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், பச்சமுத்துவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை, தினமும் காலையில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி, கையெழுத்திட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஜாமீனில் வெளிவந்த பச்சமுத்து, ஞாயிறன்று சென்னை எழும்பூரில் சி.பி.சி.ஐ.டி. அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கூடுதல் துணை ஆணையர்  ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

Leave A Reply

%d bloggers like this: