பெரம்பலூர் அருகே உள்ள பீல்வாடி கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் கம்பத்திலேயே எலக்ட்ரியசன் பலியானார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூர் அருகே உள்ள பீல்வாடி கிராமத்தில், பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியை சேர்ந்த மூக்கையன் மகன் ராஜேந்திரன் (வயது 35),  எலக்ட்ரியசன் தொழில் செய்து வந்தார். பீல்வாடி கிராமத்தை சேர்ந்த ஓம்சக்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட ராஜேந்திரன், மாமனார் வீட்டிலேயே தங்கி பீல்வாடி கிராமத்தில் எலக்ட்ரியசியன் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இன்று காலை அப்பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது வீட்டிற்கு மின்சாரம் வருவதில் பழுது ஏற்பட்டுள்ளது. அதை செய்ய முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில்  ராஜேந்திரன் கம்பத்திலேயே கிராம மக்கள் கண் முன்பே துடிதுடிக்க இறந்தார்.  அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மின்வாரியம் சார்பில் மின்பணியாளர் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  முறையாக மின்வாரியம் பழுது நீக்க மின்பணியாளரை நியமித்து இருந்தால் இது போன்ற இழப்புகள் ஏற்பட்டிருக்காது.

Leave a Reply

You must be logged in to post a comment.