வாஷிங்டன், செப்.9-
தோழியை துப்பாக்கியால் சுட்ட மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள அல்பைன் நகரில் செயல்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 300 பேர் படித்து வருகிறார்கள்.

இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் மற்றொரு மாணவியை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பள்ளி மூடப்பட்டது.

இப்பகுதியில் உள்ள மற்ற பள்ளிகளும் மூடப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.