கர்நாடகா,செப்8:-

கர்நாடகாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பை ஒட்டி, தமிழ் நாளிதழ்களை தீயிட்டு எரித்து, கன்னட அமைப்புகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், 54 தமிழ் டிவி சேனல்களின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகாவில், இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றாட நிகழ்வுகளை அம்மாநிலத்தில் உள்ள தமிழர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கச் செய்யும் விதமாக, தமிழ் செய்தி நாளிதழ்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

 தினத்தந்தி, தினமணி உள்ளிட்ட 5 தமிழ் நாளிதழ்கள் பெங்களூரில் விநியோகிக்கப்படுகின்றன. அவற்றை இன்று ஏஜென்சிகள் வினியோகம் செய்யாமல் போராட்டம் நடத்திவருகின்றன. சில இடங்களில் அதிகாலையில் வந்த தமிழ் செய்தி நாளிதழ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இதேபோன்று, 54 தமிழ் டிவி சேனல்களின் ஒளிரப்பை நிறுத்தவும் கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதையேற்று, தமிழ் டிவி ஒளிபரப்பை இன்று ஒருநாள் நிறுத்தும்படி, கேபிள் உரிமையாளர்களுக்கு, கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.