மேச்சேரி, செப் 9 – மேச்சேரி அருகே ஆசிரியை திட்டியதன் காரணமாக் மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் மாணவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள வனவாசி கிராமம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவரது மகன் கோகுல கிருஷ்ணன் (வயது 15). இவர் வனவாசியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த கோகுல கிருஷ்ணன் பள்ளியில் அனைத்து தேர்வுகளிலும் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று வந்தார்.
கோகுல கிருஷ்ணன் எப்போதும் முதல் மதிப்பெண் பெறுவதால் பள்ளியில் தயாரிக்கும் கேள்வி தாள்களை திருடி படிக்கிறாயா? என்று பள்ளி ஆசிரியை ஒருவர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கோகுல கிருஷ்ணன் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த நங்கவல்லி போலீசார் அங்கு விரைந்து சென்று கோகுலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல முயன்றனர்.
இதையடுத்து மாணவனை திட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மறியலில் ஈடுபட்ட மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசாரும், நங்கவல்லி ஒன்றிய குழு தலைவர் ஜீவானந்தமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: