சென்னை, செப். 8-

ஓணம் பண்டிகையையொட்டி சென்னை கேரள சமாஜத்தில் 5 நாட்கள் ஓணச்சந்தை நடைபெறுகிறது.

வருகின்ற 14ம் தேதி ஓணம் பண்டிகையையொட்டி சென்னை தாசப்பிரகாஷ் பேருந்து நிலையம் அருகே உள்ள கேரள சமாஜத்தில் செப்.9 முதல் செப். 14ம் தேதி வரை 5 நாட்கள் ஓணச்சந்தை நடைபெற உள்ளது. இச்சந்தையினை தொழிலதிபர் பி.கே.முகமது துவக்கி வைக்கிறார். முதல் விற்பனையை எம்.சிவதாசன் பிள்ளை பெற்றுக் கொள்கிறார்.

இச்சந்தையில் நேந்திரம் சிப்ஸ், நேந்திர வாழைப்பழம், பாயாசம் மிக்ஸ், அரிசிப் பொடி, தேங்காய், கைத்தறித் துணிகள், வேட்டி, சேலை உள்ளிட்ட புத்தாடைகள், சோப், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்ய 20 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஓணச்சந்தைக்கு ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கே.பி.சுரேஷ்பாபு தலைமை வகிக்கிறார். டாக்டர் ஏ.வி.அனுப், மலையாளிகள் சங்கத் தலைவர் எம்.ஏ.சலீம், அமராவதி ராதாகிருஷ்ணன், கே.வி.மோகன்தாஸ், வி.சி.பிரவீண், பி.என்.ரவி, கே.வி.வி.மோகனன், டி.கே.அப்துல்ராஜன், பெடரல் வங்கி மேலாளர் பி.கல்பனா, குருவாயூரப்பன் பாலன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் எம்.கே.ஏ.அனீஸ், பி.கே.பாலகிருஷ்ணன், கே.சசிதரன் ஆகியோர் சந்தைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.