கடலூர், செப்.8-

என்எல்சி நிறுவனத்தில் நடைபெற்ற தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்த
லில் வெற்றிபெற்ற சிஐடியு மற்றும் தொமுசவுக்கு மத்திய தொழிலாளர் அமைச்சகம் அங்கீகாரக் கடிதம் அனுப்பியது.

என்எல்சி நிறுவனத்தில் நீதிமன்ற தீர்பின்படி ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்று 51 விழுக்காடு வாக்குகளை பெறும் சங்கத்தோடு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

இதற்கான தேர்தல் கடந்த 17.6.2016 அன்று நடைபெற்று, அன்று இரவே முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், சிஐடியு-என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கம் 4828 (45.2 விழுக்காடு) வாக்குகள் பெற்றது.

இரண்டாவதாக தொமுச 2426 ( 22.7 விழுக்காடு) வாக்குகளைப் பெற்றது. இந்த இரண்டு சங்கத்தையும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
தேர்தல் நடந்து இரண்டு மாதங்கள் கடந்தும் அதற்கான அங்கீகார கடிதத்தை மத்திய தொழிலாளர் அமைச்சகம் வழங்காமல் காலம் கடத்தியது. இதனால் தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சனைகள் நிர்வாகத்தோடு பேசமுடியாத சூழ்நிலை இருந்தது.

அங்கீகார கடிதத்தை வழங்க வேண்டும் என்று சிஐடியு சார்பில் நெய்வேலியில் போராட்டம் நடைபெற்றது. செப்டம்பர் 7 அன்று சென்னை மத்திய தொழிலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று சிஐடியு அறிவித்தது.

இதனிடையே, காலதாமதம் செய்யாமல் உடனடியாக அங்கீகார கடிதம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மத்திய அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் போராட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து மத்திய தொழிலாளர் இணை ஆணையர் சிஐடியு சங்கத் தைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதனால் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் செப். 7 அன்று மாலை தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான கடிதத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் என்எல்சிக்கு அனுப்பியது.இந்த கடிதத்தை சிஐடியு, தொமுச தொழிற்சங்க நிர்வாகிகளிடம் நிர்வாகம் வழங்கியது.

Leave a Reply

You must be logged in to post a comment.