மத்திய பிரதேசத்தின் போபாலில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த பழங்குடியின பெண்னின் உடலை சுடுகாட்டில் புதைக்க அனுமதி மறுக்கப்பட்டால், பெண்னின் உடலை குப்பைகளை கொண்டு எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபால் அருகே நீமுச் என்ற கிராமத்தை சேர்ந்த பழங்குடி இனத்தவர் ஜகதீஸ் பில். இவரது மனைவி நோஜி பாய் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மரணமடைந்தர்.

இந்நிலையில் ஜகதீஸ் பில் தனது மனைவியின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற போது அவரிடம் உடலை எரிக்க 2,500 ரூபாய் பணம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அவரிடம் பணம் இல்லாத காரணத்தினால், சுடுகாட்டில் அனுமதி மறுத்தனர். இதனால், கடும் மன உலைச்சலுக்கு ஆளான ஜகதீஸ், பொது இடத்தில் வைத்து 3 மணிநேரமாக குப்பைகளை சேர்த்து தனது மனைவியின் உடலை எரித்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் இறந்த தனது குழந்தையை எடுத்துச் செல்ல பணம் இல்லாத காரணத்தினால் மருத்துவமனை வாயிலில் ஒரு பெண் காத்திருந்த சம்பவமும், ஒடிசாவில் இறந்த மனைவியின் உடலை பணம் இல்லாத காரணத்தினால் கணவர் தூக்கிச் சென்ற சம்பவமும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.