டமாஸ்கஸ்,செப் 5 –

சிரியாவில் இன்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 43 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 45-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சிரியாவில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதியான டார்டஸ் நகரில் இன்று இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 43 பேர் உயிரிழந்துள்ளனர். 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

டார்டஸ் நகரில் உள்ள அர்ஜனா மேம்பாலப் பகுதியில் இன்று கார் குண்டு தாக்குதலை அடையாளம் தெரியாத நபர் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவ அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் திரண்டனர்.

அதிகமான மக்கள் திரண்ட நேரம் பார்த்து , அந்த அடையாளம் தெரியாத நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி உள்ளார். இந்த இரட்டை குண்டு தாக்குதலில் 43 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 45-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.