மாரடைப்பால் பணியில் இருந்த ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் பகுதியில் உள்ள கீழ்பழுதாவூர் அருகே சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தை ஓட்டுநர் கணேசன் இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பேருந்தை சாலையில் ஓரமாக நிறுத்தினர். இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக கணேசன் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கணேசன் உயிரழிந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: