சென்னை, செப். 3-

தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆட்டினங்களுக்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழகத்தில் உள்ளஇரண்டு ஆட்டினங்களுக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுள்ளது. இதனால் இவ்வாட்டினங்களை மிகுந்த அள
வில் இனப்பெருக்கம் செய்ய வழி ஏற்பட்டுள் ளது. அரியானா மாநிலத்தில் உள்ள தேசிய கால்நடை மரபுவள ஆதார நிறுவனம் இவ் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. தற்போது,
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள “செவ்வாடு” செம்மறி ஆட்டு வகையாகும். இவ்வகை ஆடுகள்
சிறிய அளவில் இருந்து நடுத்தர அளவில் அளவான உடலமைப்பைக் கொண்டது. பழுப்பு நிறம் உடையது. இதில் அரிச்செவ்வாடு,கருஞ்செவ்வாடு என இரண்டு வகைகள் உண்டு. ஆண் செவ்வாடு கொம்புடையது. பெண் செவ்வாடு கொம்பற்றது. ஆண் செவ்வாட்டின் கொம்பின் நீளம் 13 செ.மீ. முதல் 51 செ.மீ. வரை அளவுடையதாக இருக்கும். இவ்வாட்டுக் குட்டி பிறந்தவுடன் 2.2 கிலொ எடையிருக்கும். ஆண்கிடா செவ்வாடு 28 கிலோ வரை எடையிருக்கும். பெண் செவ்வாடு 22 கிலோ வரை வளரும். தமிழ்நாட்டில் தற்பொழுது சுமார்
ஒரு லட்சத்து 50 ஆயிரம் செவ்வாடுகள் உள்ளன. இவ்வாட்டினம்திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் காணப்படுகின்றது.

அடுத்ததாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள “கொடி ஆடு” வெள்ளாட்டுவகையைச் சேர்ந்ததா
கும். பொறை ஆடு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாட்டின் உடல் அமைப்பு மெலிந்து காணப்படும். நீண்ட கால்களைக் கொண்டதாக இருக்கும். கருமை நிறம் கொண்டவை கரும் பொறை என்றும், சிகப்பு நிறம் கொண்டவை செம்பொறை என்றும் அழைக்கப்படுகின்றது. காதுகள் நடுத்தரஅளவில் வெளிப்புறமாக வளைந்திருக்கும். இக்கிடா ஆட்டின் எடை 37 கிலோ மற்றும் பெண் ஆட்டின் எடை 31 கிலோ கொண்டதாக இருக்கும். தமிழ்நாட்டில் தற்பொழுது
சுமார் ஒரு லட்சத்து 67 ஆயிரம் கொடி ஆடுகள் உள்ளன. இவ்வகை ஆடுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் கருங்குளம் போன்ற பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.

மேற்கண்ட அங்கீகாரம் பெற்றுள்ள இவ்விரண்டு ஆட்டினங்களின் உற்பத்தி பெருக்கம்மிக குறைவாக உள்ளது. இவ் அங்கீகாரத்தினால் இவ்வகை ஆடுகளை மைய, மாநிலஅரசின் நிதி உதவியோடு அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யலாம். இதன் மூலம்விவசாயிகள் அதிக அளவில் சொந்தமாக வளர்த்து பயன் பெற ஏதுவாகும்.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.