அகர்தலா, செப்.3-
திரிபுராவில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயால் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களில் 43 பேருக்கு இந்நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கடந்த ஆண்டு ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு 3 குழந்தைகள் பலியாகினர்.
திரிபுராவில் இந்த ஆண்டு 1.21 லட்சம் பேருக்கு மலேரியா நோய் பாதிப்பு இருந்ததாகவும், 43 பேர் மரணம் அடைந்ததாகவும் கூறிய சுகாதாரத்துறை அமைச்சர், ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு இதுவரை உயிர்ப்பலி ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: