ராசிபுரம், செப். 1
ராசிபுரம்  பகுதியில் ஆவின் பாலில் புழுக்கள்  மிதந்ததைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் மல்லி செட்டித்தெருவில் வசிப்பவர் பாஸ்கர். பட்டு சேலை வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை பாஸ்கரின் மனைவி புவனா, பட்டணம் சாலையில் உள்ள தனியார் கடையில் இன்றைய தேதியிட்ட 2 , 1/4 லிட்டர் ஆவின் பால் பாக்கெட்களை வாங்கினார். வீட்டிற்கு வந்து பாக்கெட்டுகளை உடைத்து பாத்திரத்தில் ஊற்றினார். அதன் பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை பாலில் ஊற்றியபோது பாலில் புழுக்கள் மிதந்துள்ளது. பாலில் புழுக்கள் மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த புவனா தனது கணவர்  கூறினர்.
03F9880F-B368-4CF1-A826-C06C3234A326_L_styvpf
பாலில் புழுக்கள் இருந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே பாலில் புழுக்கள் இருப்பது குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு ஆவின் பால் விற்பனை பிரிவு மேலாளர் திருமுருகன் தலைமையில் வந்த அதிகாரிகள் புகாருக்கு உள்ளான பாலையும், பால் பாக்கெட்டையும் ஆய்வு செய்தனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் அன்றாடம் பயன்படும் பாலில் புழுக்கள் இருந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவ்வப்போது அரசு நிர்வகித்து வரும் ஆவின் பால் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவது அரசின் மெத்தனப்போக்கை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.