சண்டிகர், ஆக 31 – தனக்கு தரம் உயர்த்தி வழங்கப்பட்ட
வெள்ளி பதக்கத்தை ரஷியா வீரர் பெசிக் குடுகோவின் குடுப்பமே வைத்துக்கொள்ளட்டும் என மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் தெரிவித்துள்ளார்.

லண்டனில் 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஆடவருக்கான மல்யுத்த போட்டியில் ஆரியானாவை சேர்ந்த யோகேஷ்வர் தத் வெண்கலப் பதக்கம் வென்றார்.

அவர் எதிர்த்து போட்டியிட்ட ரஷியாவின் பெசிக் குடுகோவ் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது .இதனால் பெசிக் குடுகோவ்விற்கு வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கம் பறிக்கப்பட்டு யோகேஷ்வர் தத் வழங்கப்பட்டது.

இது குறித்து யோகேஷ்வர் தத், குடுகேவ் அருமையான மல்யுத்த வீரர் . அவரை நான் மதிக்கிறேன் .முடிந்தால் அந்த வெள்ளி பதக்கத்தை அவர் குடும்பமே வைத்துக்கொள்ளட்டும். அவர்களின் குடும்ப மரியாதையை அது காப்பாற்றும் . எனக்கு மனிதாபிமானம் தான் முக்கியம் என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

ரஷியா மல்யுத்த வீரர் பெசிக் குடுகோவ் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: