கடலூர்: டீசலுக்காக 17 பேருந்துகளை திருடிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை அம்மாவட்ட போலீசார் கைது செய்தனர்.

கடலூர் அருகே உள்ள கங்கனாங்குப்பம் பகுதியில் பேருந்து ஒன்று மாட்டு வண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய பேருந்தின் ஓட்டுநர் இது குறித்து போலீசாருக்கு தகவல் சொல்லும் கன நேரத்தில் அந்த பேருந்து மர்ம நபர் ஒருவரால் திருடப்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27) என்ற இளைஞர் ஒருவர் பேருந்தை திருடிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அஜித்குமார் இது போல 17 பேருந்துகளை திருடியது தெரியவந்தது.

மேலும், நடத்துனர் போல நடித்து பேருந்தில் இருக்கும் பயணிகளிடம் டிக்கெட் விற்பனை செய்ததும். கடத்திய பேருந்தை டீசல் தீர்ந்த பின் அதே இடத்தில் விட்டுவிட்டு தப்பியோடுவதையும் வாடிக்கையாக கொண்டவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அவர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.

Leave A Reply

%d bloggers like this: