திருவண்ணாமலை, ஆக.26-

திருவண்ணாமலை வட்ட அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில், கொளக்குடி அரசு
மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றிபெற்றனர்.

திருவண்ணாமலையில் வட்ட அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 14 வயதுக்கு உள்பட்டோர், 17 வயதுக்கு உள்பட்டோர், 19 வயதுக்கு உள்பட்டோருக்கு என 3 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை வட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து 30 அணிகள் பங்கேற்றன. இதில், 3 பிரிவுகளிலும் கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். போட்டியில் வென்ற மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் பூ.சேகர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம், ஊராட்சித் தலைவர் சுசிலாவேலு, ஒன்றியக் கவுன்சிலர் பழனி, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் அய்யாக்கண்ணு, உடற்கல்வி ஆசிரியர்கள் பி.ராமமூர்த்தி, முனியப்பன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள்பா ராட்டினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.