சண்டிகர், ஆக 25 –

அரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த சிறுமி நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அரியானா மாநிலம் குர்கானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை எடுக்க 11 வயது சிறுமி தனது தாயாருடன் வந்திருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி சீட்டு வாங்குமாறு சிறுமியை சுமார் 45 நிமிடம் வரிசையில் நிற்கவைத்துள்ளனர்.

வரிசையில் நின்றிருந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்து அங்கேயே உயிரிழந்தார் .இதையடுத்து உரிய நேரத்தில் சிறுமிக்கு சிகிச்சையளிக்காத மருத்துவர் மற்றும் ஊழியரை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

இது குறித்து , அரியானா சுகாதார துறை அமைச்சர் அனில் விஜய் , சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: