ஜம்மு–காஷ்மீர்,ஆகஸ்ட்24:-

ஜம்மு – காஷ்மீரிலிருந்து உமர் அப்துல்லா தலைமையில் வந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் தூதுக்குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு, திங்கள் அன்று மாலை வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், எம். ஏ. பேபி உட்பட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இது தொடர்பாக சீத்தாராம் யெச்சூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப்பின்னர், நாங்கள் அரசாங்கத்திற்குப் பரிந்துரைத்தது பின்வருமாறு:

காஷ்மீரில் இயங்கிடும் அனைத்து அரசியல் சக்திகளுடனும் அரசாங்கம் அரசியல் ரீதியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிட வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.