கோவை : கோவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் அமல் ராஜ் கூறியதாவது :-

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வ.உ.சி மைதானத்தில் மட்டும் 55 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 350 போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் நாளை முதல் கோவையின் முக்கிய வீதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் மேன்சன்களில் தங்கியிருப்பவர்கள் குறித்து தகவல்களை சேகரிப்பார்கள். மேலும், சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடக்கும் இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படும். சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் முதல், சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெறும் வ.உ.சி. மைதானம் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.