புதுதில்லி, ஆக் 1 –

மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் இவ்வாண்டு நடைப்பெறவுள்ள 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்படுள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் கடந்த 2012ஆம் ஆண்டில் லண்டனில் நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 60 கிலோ எடை பிரிவில் வடகொரிய வீரரை எதிர்த்து வெங்கலப் பதக்கம் வென்றார். மேலும் 2014ஆம் ஆண்டில் நடைப்பெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். இந்நிலையில் தற்போது நடைப்பெறவுள்ள 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ பிரிவில் பங்கேற்கவுள்ளார். தற்போது நடை பெறும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் யோகேஸ்வர் தத் பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்படுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.