திருச்சிராப்பள்ளி: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுக் குழுக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது.
மாநில அமைப்பாளர்கள் ஜனார்த்தனன், ராஜாராம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில இணை அமைப்பாளர்கள் ராமச்சந்திரன், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அழகரசன், பிரபு, துரைராஜ், பாண்டியன், கிருஷ்ணன், இசக்கிமுத்து, சீனிவாசன், சேரமான், மதியழகன், சம்பத், நாகராஜன், ரவி, ராஜேந்திரன், மோகன்குமார் ஆகியோர் பேசினர்.
தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களும் வெவ்வேறு பாடத்தில் உயர்கல்வி பெற்றிருந்தாலும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கி இருப்பதுபோல் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக இளங்கோவன் வரவேற்றார். மாநில இணை அமைப்பாளர் இருதயராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.