தஞ்சாவூர், ஜூலை 30-
களஞ்சேரியிலிருந்து தஞ்சாவூர் பழைய பேருந்துநிலையத்திற்கு வந்துகொண்டிருந்த சிற்றுந்துதஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே குளமங்கலத்தில் விபத்துக்குள்ளானது. இதில் காயம் அடைந்தவர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலை விபத்தில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருபவர்களிடம்தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு நலம் விசாரித்தார். மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.