கரூர்,ஜூலை 30-
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, கரூர் கோவை சாலையில் உள்ள கனரா வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பா
ட்டம் நடத்தினர்.
வங்கி ஊழியர்கள்- அதிகாரிகள் சங்க தலைவர் ஜி.வைத்தியநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஐ.வெங்கடேசன் , ஆர்.கணேசன் மற்றும் சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் ஆகியோர் பேசினர். 20 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்ட 25 வங்கிக
ளின் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் மூடப்பட்டிருந்தன. இவற்றில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.