பேராவூரணி, ஜூலை 30-
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே ஆவணத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை காவல்துறை யினர் தேடி வருகின்றனர்.
இதுபற்றி காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது,
பட்டுக்கோட்டை பாக்கியம் நகரை சேர்ந்த ஜெயம் என்பவர் மகன் முத்துராமன்(19). இவர் ஆவ
ணத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று முத்துராமன் கல்லூரிக்கு செல்வதற்காக பட்டுக்கோட்டையிலிருந்து பேருந்தில் வந்து இறங்கி
யுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஏழுபேர் கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் முத்துராமனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.
இதுகுறித்து முத்துராமன் அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டையை சேர்ந்த தயா, வீரா, பேப்பர் கார்த்தி மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறது. தாக்குதலில் படுகாயமடைந்த முத்துராமன் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave A Reply

%d bloggers like this: