மன்னார்குடி,ஜூலை 30-
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிரை காப்பாற்ற ஆறுகள், பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வார அரசு முன் வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு தர தொடர்ந்து மறுப்பதால் தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகளில் நீர் பாய்ந்து ஓடி வளம் சேர்க்காததால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. விவசாயிகள் பம்புசெட் மூலம் சாகுபடி பணிகளை செய்யும் நிலை உள்ளது. அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகள் சாகுபடி செய்ய ஏதுவான நிலையை அரசு உருவாக்க வேண்டும்.
ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படாததால் கடைமடைப்பகுதியான ஊத்துப்பேட்டை,திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கடைமடைப்பகுதிகளில் சம்பா பயிரைக் காப்பாற்ற ஆறுகள்,பாசன வாய்க்கா
ல்கள் உண்மையாக தூர்வாரப்பட வேண்டும். இதனை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தூர்வாரும் பணிகளை முறையாக உண்மையாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.