சிவகங்கை, ஜூலை 29-
சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம் முதல் இளையான்குடிக்கும்,இளையான்குடி முதல் தாயமங்கலத்திற்கும் பள்ளி நேரத்திற்கு மாணவ,மாணவிகளுக்கு வசதியாக அரசு நகர பேருந்து இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் கே.அழகர்சாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
தாயமங்கலத்தை சுற்றி 100 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களின் மாணவர்கள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி கல்விக்கு இளையான்குடி, புதூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தாயமங்கலத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் நேரத்திற்கும்,மாலையில் பள்ளியை விட்டு இளையான்குடியிலிருந்து தாயமங்கலத்திற்கும் வருவதற்கு நகர பேருந்து கிடையாது. இதனால் பெரும்பாலான மாணவ,மாணவிகள் ஒரு நாளைக்கு போக்குவரத்திற்கு ரூ.20 செலவழித்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே தாயமங்கலத்திலிருந்து இளையான்குடிக்கு காலை 8 மணிக்கும், பள்ளி நேரம் முடிவடையும் மாலை 5 மணிக்கும் நகர பேருந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply