தொழிலாளர் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிரான்ஸ் அரசு கொண்டு வந்த மக்கள் விரோத மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தங்களுக்கு கடந்த சில மாதங்களாகவே கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்பதால் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன.

கடந்த ஆண்டு குண்டுவெடிப்பைக் காரணம் காட்டி அவசர நிலை உத்தரவை நீட்டித்து வந்த பிரான்ஸ் அரசு, அதைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்க முனைந்தனர். ஏராளமான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.