நீலகிரி,ஜூலை20:-

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் 2 கோடியே 37 லட்ச ரூபாய் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டது.

கடத்தலில் ஈடுபட்ட தெலுங்கானாவைச் சேர்ந்த சர்வன்,உமாமகேஷ்வர் ராவ்,கணேஷ் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.கடந்த 17 ஆம் தேதி கேரள காவல்துறையினரின் வாகன தணிக்கையில் 3 கோடியே 20லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றும்  மூன்று மாதங்களுக்கு முன்னர் கூடலூர் வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 கோடி ரூபாயை கேரளா காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

Leave a Reply

You must be logged in to post a comment.