சிம்லா, ஜூலை 16-
இமாச்சலப்பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் ஆம்புலஸ் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் சனிக்கிழமை காலை பள்ளத்தாக்கில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.