ஈட்டாநகர், ஜுலை 16-
அருணாச்சலப் பிரதேச காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியை நபம் துகி ராஜினாமா செய்ததை தொடர்ந்து அவருக்கு எதிராக கலகக்குரல் எழுப்பிய பீமா காண்டு சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி கண்டு தலைமையில் புதிய காங்கிரஸ் அரசு அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. அம்மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் முதல்வர் நபம் துகிக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜுலை 16) காலை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து நபம் துகி ராஜினாமா செய்தார். அபருக்கு பதிலாக முன்னாள் முதல்வர் தோர்கி கண்டுவின் மகன் பீமா கண்டு சட்டன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக தோவு செய்யப்பட்டார். .
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு எதிராக இருந்த கலிகோ புல் உட்பட 44 எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். அதை தொடரந்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் படிரிச்சோ, நபம்துகி, பீமா கண்டு, ஜெய்குமார் ஆகியோர் ஆளுனரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளதாக பீமா கண்டு தெரிவித்துள்ளார். 2 சுயேச்சை உறுப்பினர்கள் உட்பட 47 உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக கண்டு தெரிவித்துள்ளார். எனினும் கவர்னரிடமிருந்து அழைப்பு வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் அரசை கவிழ்த்து விட்டு நபம்துகியின் அதிருப்தியாளரான கலிகோபுல் முதல்வராக பாஜக அதரவளித்தது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நபம்துகிக்கு வாய்ப்பளிக்காத ஆளுனரின் நடவடிக்கையையும் கட்சித் தாவலை ஊக்குவித்து ஆட்சி கவிழ்ப்புக்கு உதவிய மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின் உச்சநீதி மன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அங்கு பெரும்பான்மை நீரூபிக்கப்பட்டு தற்போது காங்கிரஸ் தலைலையிலான ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.