பாரீஸ், ஜூலை 6 –

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டிகளின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு உலகக் சாம்பியன் ஜெர்மனியும், போட்டிகளை நடத்தும் பிரான்சும் மோதுகின்றன. 12வது முறையாக யூரோ கோப்பை கால்பந்துப் போட்டிகளில் விளையாடும் ஜெர்மனி 1972,1980, 1996 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. பிரான்சு இரண்டு (1984, 2000) முறை கோப்பையை வென்றுள்ளது.

ஜெர்மனியை எதிர்கொள்ள வுள்ள பிரான்சு அணிக்கு, நமது எதிராளிகள் ஜெர்மனி கவனம் தேவை என்று பிரான்சு பயிற்சி யாளர் டிதியே டெசாம்ஸ் முன் னெச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்சு பயிற்சியாளர் கூறுவது போல் ஜெர்மனி அபாயகரமான அணிதான். என்றாலும் பிரான் சுக்கு எதிரான அரையிறுதியில் அந்த அணியின் முக்கிய வீரர்கள் பலர் கள மிறங்க இயலாமல் இருப்பது பிரான்சு அணிக்கு சாதகமாக அமையக்கூடும்.

ஜெர்மனி அணியில் மாட் ஹம் மின்ஸ், மரிய ஹோமஸ்.  ஸமி கதீரா ஆகியோர் அரையிறுதி ஆட்டத்தில் கள மிறங்கமாட்டார்கள். மேலும் பாஸ்டியன் ஷ்வைன்ஸ்டெய்கர் களமிறங்குவதும் நிச்சயமில்லை.  மாட் ஹம்மின்ஸ்  ஏற்கனவே நடைபெற்ற ஆட்டங்களில் இரண்டு மஞ்சள் அட்டை பெற்றுள்ளதால் அவர் விளையாட இயலாது. மற்றவர்கள் காயத்தால் களமிறங்க இயலாது. இது ஜெர்மனியை நிச்சயம் பாதிக்கும். மரிய ஹோம்ஸிற்குப் பதிலாக மரியோ ஹோட்ஸெ களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது. ஜெர்மனி பயிற்சியளார் ஜோக்கிம் லோ கடைசி நேரத்தில் சில அதிரடி மாற்றங்களுடன் வீரர்களைக் களத்தில் இறக்கக்கூடும்.

ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறியபோதிலும் முந்தைய ஆட்டங் களில் அவர்களது செயல்பாடு திருப்திகரமாக அமையவில்லை. காலிறுதி ஆட்டத்தில் இத்தாலியை அவர்கள் வீழ்த்தினார்கள் என்றாலும் கடந்த உலகக் கோப் பையில் ஆடியதுபோன்ற ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. பந்தை தங்கள் வசம் வைத்திருப்பதில் திறமைபெற்ற அணியான ஜெர்மனி எந்தவொரு நெருக்கடியையும் கடந்து வெற்றிபெற முயற்சிக்கும்.

அயர்லாந்து மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் பிரான்சு வீரர்களின் தடுப்பு ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்ததைப் பார்த்தோம். இத்தொடரில் பிரான்சு இதுவரை வலிமையான அணியுடன் மோதவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

முன்களத்தில் பிரான்சு முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதைக் காண முடிகிறது. தங்கக் காலணிக்கான போட்டியில் உள்ள 4 வீரர்களில் 3 பேர் பிரான்சு அணியைச் சேர்ந்தவர்கள் என்பதே இதற்கு உதாரணம்.

பிரான்சு இதற்கு முன்பு இரண்டு முறையும் யூரோ கோப்பையை வென்றது அவர்களது சொந்த மண்ணில்தான். 1984ம் ஆண்டு சொந்த மண்ணில் கோப் பையை வென்ற பிரான்சு சரியாக 16 ஆண்டுகள் கழித்து அதாவது 2000ல் சொந்த மண்ணில் கோப்பையை வென்றது. இதோ இப்போது மீண்டும் 16 ஆண்டுகள் கழித்து சொந்த மண்ணில் போட்டி நடைபெறுகிறது.

ஜெர்மனி-பிரான்சு அணிகள் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12 முறை பிரான்சும் 9 முறை ஜெர்மனியும் வெற்றி பெற்றுள்ளன. 6 ஆட்டங்கள் சமநிலையில் முடிந் துள்ளன. இந்தக் கணக்கும் பிரான்சுக்குச் சாதகமாகவே உள்ளது. கடைசியாக இரு அணிகளும் கடந்த உலகக் கோப்பைப் போட்டிகளின் காலிறுதி ஆட்டத்தில் மோதிய போது வெற்றி ஜெர்மனியின் பக்கம் நின்றது.

கடந்தகாலக் கணக்குகள் எப்படியிருந்தாலும் இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் வேகத்துடன் விவேகத்தைப் பயன்படுத்தும் அணியே இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

Leave a Reply

You must be logged in to post a comment.