for mdu -sfi news nkl (8) for mdu -sfi news nkl (11)நாமக்கல், ஜூலை 1-
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்  தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும்  பாராட்டு  விழா புதனன்று நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் மற்றும் பாவை கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த விழாவில் மாவட்டம் முழுவதும்  இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும்,  ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்விற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய நிர்வாக  குழு உறுப்பினரும், மாநில துணை தலைவருமான ஏ.டி.கண்ணன் தலைமை தாங்கினார். பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குனர் கே.கே.ராமசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர்  சிஏ.என்.வி.நடராஜன் விழாவை துவக்கி வைத்து உரையாற்றினார். நாமக்கல்  மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் என்.சுரேந்தர், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவர் சங்க மாநில தலைவர் வீ.மாரியப்பன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் எஸ்.மோஹனா, சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவர் நல மைய இயக்குனர் அ.இளைய பெருமாள் ஆகியோர் அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவர்களுக்கு பதக்கம், கேடயம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவப்படுத்தினர். மேலும், நாமக்கல் மாவட்ட அளவில் அனைத்து  அரசு பள்ளிகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற 850க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள்  பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் பெயரில் பதக்கம், கேடயம், பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்ட துணை செயலாளர் ஜே .அரிச்சந்திரன் மந்திரமா ? தந்திரமா? என்ற நிகழ்ச்சியை நடத்தினர்.  இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.வெற்றிவேல், மாவட்ட செயலாளர் ஜோதிபாசு துணைச் செயலாளர் கே.ஆஷா, துணை தலைவர்கள்  சி.பாலகுமார், சி.சந்திரகலா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் தே.சரவணன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.