ராஞ்சி. ஜூன் 22-

ராஜஸ்தானில், ஜார்க்கண்ட் மாநில போலிசாரால் இளம் பெண் கைது செய்யப்பட்டு கயிறு கட்டி இழுத்துச் செல்லப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் தனது கணவர், மாமனார் மற்றும் மாமியார் மற்றும் கணவரின் சகோதரியான அபர்ணா(23) மீது வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.  புகாரின் பேரில் காவல்துறையினர் ராஜஸ்தான் மாநிலம்,காசா பகுதியில் வசித்து வரும் அவரது கணவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். புகார் பற்றிய தகவல் அறிந்து கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் தப்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிலிருந்த அபர்ணாவை கைது செய்த காவல்துறையினர் அவர் தப்பித்து செல்லாமல் இருப்பதற்காக அவரது இடுப்பில் கயிறு கட்டி ரயில் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

இது சகபயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏதோ பயங்கரவாதி போன்று கயிறுகளை கட்டி இழுத்து செல்வது மனித உரிமை மீறல் ஆகும். மேலும் எதிர்தரப்பினர் புகார் மட்டுமே அளித்திருக்கின்றனர். அதன் மீது விசாரணை நடைபெற்று தீர்ப்பு வரும் வரை அவர் குற்றவாளி அல்ல. இந்நிலையில் காவல்துறையினர் குற்றவாளி போல் பொதுமக்கள் முன்னிலையில் கயிரை கட்டி இழுத்து செல்வது என்பது மிகவும் கண்டிக்க தக்கது என மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.